எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நடிகர் அஜித்குமார் 8 மாதங்களில் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் 8 மாதங்களில் 42 கிலோ எடையைக் குறைத்தது குறித்து பேசியுள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. தற்போது பைக் ரேஸிங்கில் முழுமையான கவனத்தை செலுத்தி வருகிறார். ரேஸிங்கிற்காக நடிகர் அஜித் உடல் எடையைக் குறைதத்தாகக் கூறியுள்ளது சமூக ஊடகங்களில் வைரலானது. அஜித் பேசியதாவது:-
15 ஆண்டுகளுக்குப் பிறகு கார் ரேஸிங்கில் பங்கேற்கிறேன். அதனால் எனக்கு மிகுதியான உடற்தகுதி தேவைப்பட்டது. 8 மாத கால இடைவெளியில் 42 கிலோ எடையைக் குறைத்தேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது எடை இழப்புப் பணியைத் தொடங்கினேன். உணவுமுறை, அளவு கட்டுப்பாடு, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு இதைக் குறைத்தேன். நான் ஒரு டீடோட்டலராகவும் சைவ உணவை உண்பவராகவும் மாறிவிட்டேன். ரேஸிங்கிற்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். அதை நான் தொடர்ந்து செய்வேன். ரேஸிங்கிற்காக திரைப்பட படப்பிடிப்புகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வேன் எனக் கூறினார்.
எனது படங்களில் சண்டையிடுவதும் நான்தான். அதிலும் காயம் ஏற்படுகிறது. அதனால் ஆக்ஷன் படங்களில் நடிக்காமல் இருக்க மாட்டேன். அதேபோலதான் ரேஸிங்கிற்கும் உடலும் உள்ளமும் அதிகமான ஈடுபாடு தேவைப்படுகிறது. அதனால், இதில் காயம் ஏற்படுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


