எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ஏ அணியை பி.சி.சி.ஐ. நேற்று (மே 16) அறிவித்துள்ளது.
லயன்ஸ் அணிக்கு எதிராக...
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் மே 30 முதல் தொடங்குகிறது.
ஷுப்மன் கில் கேப்டன்...
இந்தியா ஏ அணியில் தேசிய அணிக்காக விளையாடும் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் துருவ் ஜுரெல் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படும் ஷுப்மன் கில், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்தியா ஏ அணியுடன் இணைவார். இரண்டாவது போட்டியில் சாய் சுதர்சனும் அணியில் இணையவுள்ளார்.
இந்தியா ஏ அணி விவரம்...
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜுரெல் (துணைக் கேப்டன்), நிதீஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


