முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய தாக்குதலை முதன்முறையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்

சனிக்கிழமை, 17 மே 2025      உலகம்
Pak 2024-02-14

இஸ்லாமாபாத்,  ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.  

முன்னதாக,  வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை அவர் தெரிவித்துள்ளார். “மே.10 அதிகாலை 2.30 மணி அளவில் எனக்கு ஜெனரல் முனீர் போன் செய்தார். அப்போது நமது நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறினார். அது மிகவும் சங்கடம் தந்த தருணம்” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.

“பாகிஸ்தானும் இந்தியாவும் அமைதியான அண்டை நாடுகளைப் போல காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அமைதி நிலவினால் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் நம்மால் ஒத்துழைக்க முடியும்” என ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானுடனான எந்தவொரு பேச்சுவார்தையும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்ததாக மட்டுமே இருக்கும். ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது. அவர்கள் பயங்கரவாதிகளின் கட்டமைப்பை மூட வேண்டும். இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையில் மூன்றம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து