முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியார் பெயருக்கு பின்னால் சாதி பெயர்: யு.பி.எஸ்.சி. தேர்வில் சர்ச்சை

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      தமிழகம்
Exsm-2025-05-25

Source: provided

சென்னை : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு இந்த ஆண்டு 979 பேரை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.

சென்னையில் 69 மையங்களில் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த  தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும். தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மண்ணடியில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இந்தியில் மட்டுமே வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய தகவல்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதை பார்த்து தேர்வு எழுத சென்றவர்கள் குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில், யு.பி.எஸ்.சி. தேர்வில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதிலால் சர்ச்சை எழுந்துள்ளது.  சுயமரியாதை இயக்கம் தொடங்கியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கேள்வித்தாளில் 4 விடைகளில் ஒன்றில் பெரியார் பெயருடன் அவரது சாதி பெயரையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு பெரியாரிய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து