எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக லேசான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சி (நீலகிரி) 210 மி.மீ, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 140 மி.மீ, வால்பாறை பி.டி.ஓ. (கோயம்புத்தூர்) 100 மி.மீ, சின்கோனா (கோயம்புத்தூர்), எமரால்டு (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 90 மி.மீ, மேல் பவானி (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 70 மி.மீ, செருமுள்ளி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 60 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.
இதனிடையே நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (26-ம் தேதி) மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (26-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


