முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய தடகள போட்டியில் வெண்கலம்: செர்வின் செபாஸ்டியனுக்கு துணை முதல்வர் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      விளையாட்டு
Udhayanidhi 2024-11-25

Source: provided

 குமி :  ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர் செர்வினுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய தடகளம்... 

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் உள்ள குமியில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் 64 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர். 

செர்வின்...

பிரவீன் சித்ரவேல் (டிரி பிள் ஜம்ப்), செர்வின் (20 கி.மீ. நடைபந்தயம்), தமி ழரசு, ராகுல்குமார் (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), விஷால், சந்தோஷ்குமார் (4x400 மீட்டர், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்), வித்யா (400 மீட்டர் ஒட்டம், 400 மீட்டர் தடை தாண்டு தல்), அபினயா (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), சுபா (4x100 மீட்டர், 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்).

செர்வின் வெண்கலம்...

ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயம் முதலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன் வெண்கல பதக்கம் பெற்று முத்திரை பதித்தார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 21.14 நிமிடத்தில் கடந்தார். தொடக்க நாளிலேயே இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று கொடுத்து செர்வின் சாதித்தார். சீன வீரருக்கு தங்கமும், ஜப்பான் வீரருக்கு வெள்ளியும் கிடைத்தன.

துணை முதல்வர் வாழ்த்து... 

ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த செர்வினுக்கு துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற செர்வின் செபாஸ்டியனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த மதிப்பு மிக்க போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். 

பெருமை கொள்கிறோம்...

எங்கள் சர்வதேச மிஷன் பதக்க திட்டத்தின் (எம்.ஐ. எம்.எஸ்.) விளையாட்டு வீரரான செர்வினின் சிறந்த சாதனையில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். நமது நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்ததற்கு அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவருக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்கும். இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து