Idhayam Matrimony

எவரெஸ்ட் சிகரம் ஏறிய சிறுமி: துணை முதல்வர் நேரில் பாராட்டு

வியாழக்கிழமை, 29 மே 2025      தமிழகம்      விளையாட்டு
Udhayanidhi-2025-05-29

சென்னை, எவரெஸ்ட் சிகரம் ஏறிய நெல்லை சிறுமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

எவரஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்டு அடிவார முகாமை அடைந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ், நேற்று தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ், தனது தந்தை ஸ்ரீதர் வெங்கடேஷ் உடன் சேர்ந்து மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டு மலையேற்ற பயிற்சி பெற்று வருகிறார். அவர் 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் 30க்கும் மேற்பட்ட பல்வேறு மலைகளில் மலையேற்றம் மேற்கொண்டுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டுள்ள பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷை பாராட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கேடயத்தை வழங்கி, மேலும் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க வாழ்த்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து