Idhayam Matrimony

பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி இன்று சந்திப்பு

வியாழக்கிழமை, 29 மே 2025      தமிழகம்
Anbumani 2024-12-29

Source: provided

சென்னை: பா.ம.க. நிர்வாகிகளை சென்னையில் அன்புமணி இன்று சந்திக்க உள்ளார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அன்புமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டுக்கு மத்தியில் பா.ம.க. நிர்வாகிகளுடன் இன்று அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பனையூர் அலுவலகத்தில் நாளை முதல் ஞாயிறு வரை பா.ம.க. மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை பா.ம.க. தலைவர் அன்புமணி சந்திக்கிறார்.

மாவட்டம் தோறும் புதிய உறுப்பினர் அட்டைகளை அன்புமணி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராமதாஸ் கடுமையாக விமர்சித்த நிலையில் அன்புமணி கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து