எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் இன்று அதிக மதிப்பெண் எடுத்த 600 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி த.வெ.க. தலைவர் விஜய் கவுரவிக்கிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். விஜய்யின் இந்த திட்டம் மாணவ, மாணவிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டி வருகிறது. விஜய் கையினால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகள் பலர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் 2025-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா இன்று காலை 9 மணி முதல் மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சி தலைவர் விஜய் உத்தரவுப்படி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.
பரிசளிப்பு விழாவில் சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை பெரம்ப லூர், வேலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் 600 பேர் பங்கேற்கின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளும், மாநில அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகளும் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளிகள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவ, மாணவிகளும் தங்களது பெற்றோருடன் பங்கேற்க இருக்கின்றனர். விழாவில் சுமார் 2000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விழாவுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் குளித்து விட்டு தயாராகி வருவதற்கு மாமல்லபுரத்தில் முகுந்தன் மகால் என்ற திருமண மண்டபம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் பொறுப்பாளர்களாக ராஜேஷ், சபரி என்ற நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தென் மாவட்டத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். விழாவுக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. விழா அரங்கிற்குள் செல்போன், பேப்பர், பேனா மற்றும் இதர பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை சரியாக 9 மணிக்கு விழா தொடங்க இருக்கிறது. தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்கப்படுத்தி த.வெ.க. தலைவர் விஜய் சிறப்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வைரக் கம்மல் அல்லது வைர மோதிரம் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் விஜய் பரிசு வழங்கி கவுரவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம், கல்வி ஊக்க தொகை, விருதுகளை வழங்கி மாணவ, மாணவிகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். பரிசு பெற இருக்கும் 600 மாணவ, மாணவிகளுக்கும் விஜய் நேரில் பரிசு வழங்கி உற்சாகப்படுத்த இருக்கிறார். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மதியம் 21 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருக்கிறது.
பரிசளிப்பு விழாவை தொடர்ந்து மாமல்லபுரம் நகரம் இப்போதே விழாக்கோலம் பூண்டு உள்ளது. விழா நடைபெறும் இடத்தின் நுழைவு வாயில் வாழை மற்றும் பல்வேறு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விழாவில் பங்கேற்க வரும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மேளதாளங்கள், நாட்டுப்புற கலைஞர்கள், செண்டை மேளத்துடன் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட இருக்கிறது. 2-ம் கட்ட பரிசளிப்பு விழா அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


