Idhayam Matrimony

மதுரை, பழங்காநத்தத்தில் ரூ.68.38 கோடி மதிப்பில் மேம்பாலம்: நாமக்கல்லில் ரூ.424.38 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 29 மே 2025      தமிழகம்
CM-3-2025-05-29

செங்கல்பட்டு, தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் மதுரை, பழங்காநத்தத்தில் ரூ.68.38 கோடி மதிப்பில் மேம்பாலம், நாமக்கல்லில் ரூ.424.38 கோடி செலவில்

மேம்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலையையும் அவர் திறந்து வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் "உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் 424 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு - ஈரோடு சாலை, மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் 68 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம், மேல்பாக்கத்தில் 6 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினருக்கான மறுகுடியமர்வு குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் 9 மாணவ, மாணவியர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து