முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி

புதன்கிழமை, 9 ஜூலை 2025      இந்தியா
Jaguar-flight 2025-07-09

Source: provided

ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில், விமானி உள்பட இருவர் பரிதாபமாக பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. . முதற்கட்ட தகவல்களின்படி, விபத்துக்குள்ளான விமானம் கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது. சேதமடைந்த விமானத்தில் இருந்து விமானியின் உடல் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் என்ன? பலியான விமானி மற்றும் மற்றொரு நபர் யார்? என்ற அடையாளங்கள் இன்னும் இந்திய ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், வயல் வெளியில் கரும்புகை வெளிப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சுரானா மற்றும் காவல் துறையினர், இந்திய ராணுவத்தினர் விபத்து நடந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து