முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி

புதன்கிழமை, 9 ஜூலை 2025      விளையாட்டு
Bumra 2024-03-20

Source: provided

ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜஸ்பிரீத் பும்ரா இந்திய டெஸ்ட் அணியில் ஜனவரி 5, 2018ஆம் ஆண்டு அறிமுகமானார். இவரது வித்தியாசமான பந்துவீச்சு பாணி பலரையும் அச்சுறுத்தியது. வலது கை வேகப் பந்துவீச்சாளரான பும்ரா டெஸ்ட்டில் 46 போட்டிகளில் விளையாடி 210 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

 

இங்கிலாந்துக்கு எதிராக பும்ரா விளையாடிய முதல் போட்டியில் இந்திய அணி தோற்க, பும்ரா இல்லாமல் விளையாடிய இந்திய அணி 2-ஆவது டெஸ்ட்டில் வென்றது. பும்ரா அறிமுகமானதில் இருந்து இந்திய அணிக்கு 46 போட்டிகளில் விளையாடியுள்ளதில் 20 போட்டிகள் மட்டுமே வென்றுள்ளது. பும்ரா இல்லாமல் இந்திய அணி 27 போட்டிகளில் 19 -இல் வென்று அசத்தியுள்ளது.     பும்ராவுடன் இந்திய அணி - 46-இல் 20 வெற்றி, 22 தோல்வி, 5 சமன்.    பும்ரா இல்லாமல் இந்திய அணி - 27-இல் 19 வெற்றி, 5 தோல்வி, 3 சமன்.  பும்ரா விளையாடினால் வெற்றி சதவிகிதம் 43 -ஆகவும், பும்ரா இல்லாவிட்டால் வெற்றி சதவிகிதம் 70-ஆகவும் இருக்கிறது. இங்கிலாந்துடன் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், அடுத்த போட்டியில் பும்ரா விளையாடவிருக்கிறார். 

________________________________________________________________________________________________

இந்திய ஜோடி உலக சாதனை

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 4) போட்டியில் கூட்டு கலப்பு அணி பிரிவில் இந்திய ஜோடியான ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியாக அதிக புள்ளிகளை பெற்ற ஜோடி என்ற உலக சாதனையையும் படைத்துள்ளனர். 

ரிஷப், 72 அம்புகளில் 68 அம்புகள் 10 புள்ளிகளை 'குறி' பார்த்து எய்தி அசத்தினார். மொத்தத்தில் இவர் மட்டும் 716 புள்ளிகள் பெற்றார். இவரது அணியை சேர்ந்த ஜோதியும் 68 அம்புகள் 10 புள்ளிகளை 'குறி' வைத்து, மொத்தத்தில் 715 புள்ளிகளை பெற்றார். இது இவர்களின் தனிப்பட்ட சிறந்த செயல்பாடாகவும் பதிவானது.

_____________________________________________________________________________________

அரையிறுதியில் அல்காரஸ்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் அல்காரஸ், இங்கிலாந்தின் கேமரூன் நோரி உடன் காலிறுதி சுற்றில் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி சுற்றில் ரஷியாவின் கரன் கச்சனாவை வீழ்த்தி அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

_____________________________________________________________________________________

கில், ஸ்மித் முன்னேற்றம்

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி வீரர் ஜோரூட்டை பின்னுக்கு தள்ளி சக அணி வீரர் ஹாரி ப்ரூக் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் 16 இடங்கள் முன்னேறி டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் 4-வது இடத்தில் தொடர்கிறார். சுப்மன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான ரிஷப் பண்ட் 1 இடம் பின் தங்கி 8-வது இடத்தில் உள்ளார்.

_____________________________________________________________________________________

முன்னாள் வீரர் காலமானார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் (வயது 87) உடல்நலக் குறைவு காரணமாக காலமானர். 1959-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான கோர்டன் ரோர்க், மிகவும் வேகமான பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஷ் தொடரின் 2 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் ஆகும்.

அதன்பின்னர், ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிவிட்டார். அடிலெய்டில் நடந்த அறிமுகப் போட்டியில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், அவரது பந்து வீச்சு முறை மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இந்திய சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக, அவரது கிரிக்கெட் வாழ்க்கை 25 வயதிலேயே முடிவுக்கு வந்தது. முதல் தர கிரிக்கெட்டில், நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக அவர் 88 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மிகக் குறுகிய கால சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் 4 போட்டிகளில் விளையாடியிருந்த அவர், 1.73 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________

அயர்லாந்து அணி அறிவிப்பு

ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்த தொடர்களுக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு கேபி லூயிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து ஒருநாள் அணி விவரம்: கேபி லூயிஸ் (கேப்டன்), அவா கேனிங், கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, அலானா டால்செல், லாரா டெலானி, சாரா போர்ப்ஸ், ஆமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, லூயிஸ் லிட்டில், ஜேன் மாகுயர், லாரா மெக்பிரைட், காரா முர்ரே, லியா பால், ஓர்லா பிரெண்டர்காஸ்ட். அயர்லாந்து டி20 அணி விவரம்: கேபி லூயிஸ் (கேப்டன்), அவா கேனிங், கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, லாரா டெலானி, ஆமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, லூயிஸ் லிட்டில், சோபி மெக்மஹோன், ஜேன் மாகுயர், லாரா மெக்பிரைட், காரா முர்ரே, லியா பால், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், ரெபேக்கா ஸ்டோக்கல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து