முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.37.5 லட்சம் வெகுமதி: சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் சரண்

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      இந்தியா
Naxalites 2024-03-31

Source: provided

சத்தீஸ்கர் : சத்தீஸ்கர் மாநிலத்தின் அபூஜ்மாத் பகுதியில் இயங்கி வந்த 22 நக்சல்கள், நாரயணப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த குதூல், நெல்நார், இந்திராவதி ஆகிய பகுதிகளின் பிரிவுகளில் இயங்கி வந்த நக்சல்கள், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்தோ - திபெத்திய காவல் படையினரிடம் நேற்று சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சரணடைந்த நக்சல்கள் 22 பேரையும் பிடிக்க ஏற்கனவே வெகுமதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதில், மன்கு குஞ்சம் (வயது 33) என்பவரை பிடிக்க ரூ.8 லட்சம் வெகுமதியும், ஹித்மே குஞ்சம் (28), புன்னா லால் (26) மற்றும் சனிராம் கொர்ரம் (25) ஆகியோரை பிடிக்க தலா ரூ.5 லட்சம் வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தன. 

இத்துடன், சரணடைந்த 11 பேரை பிடிக்க தலா ரூ.1 லட்சமும், மீதமுள்ள 7 பேரை பிடிக்க தலா ரூ.50,000 வெகுமதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது சரணடைந்தவர்கள் அனைவரின் மீதும் விதிக்கப்பட்டிருந்த வெகுமதிகளின் மொத்த மதிப்பானது ரூ.37.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், சரணடைந்த நக்சல்களில் ஒரு தம்பதி உள்பட 8 பெண்கள் மற்றும் 14 ஆண்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சரணடைந்த நக்சல்கள் அனைவருக்கும் அரசுத் திட்டத்தின்படி ரூ.50,000 வழங்கப்பட்டு, அவர்களது மறுவாழ்விற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள், நாட்டிலுள்ள அனைத்து நக்சல்களும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து