முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      இந்தியா
Modi 2024-12-20

Source: provided

ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.

கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார். 2015இல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை கோட்டா சீனிவாசராவ் வென்றுள்ளார். 1999- 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக கோட்டா சீனிவாசராவ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், கோட்டா ஸ்ரீனிவாச ராவ்   மறைவு வருத்தமளிக்கிறது. அவரது சினிமா திறமை மற்றும் பல்துறைத்திறனுக்காக அவர் நினைவுகூரப்படுவார். தனது அற்புதமான நடிப்பால் பல தலைமுறைகளாக பார்வையாளர்களை கவர்ந்தவர். சமூக சேவையிலும் முன்னணியில் இருந்த அவர், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 கோட்டா சீனிவாச ராவ்  உடலுக்கு பல தெலுங்கு நடிகர்களும் அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திரா துணை முதலமைச்சரான பவன் கல்யாண், நடிகர் பிரம்மானந்தம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் சத்யராஜ் அவரது  இரங்கலை விடியோவாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து