முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனாளிகளுக்கு 6,007 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் அமைச்சர்கள் வழங்கினர்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      தமிழகம்
KKSSR-2025-07-25

சென்னை, சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் 6,007 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை அமைச்சர்கள் வழங்கினர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-  அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,  சு.முத்துசாமி,  பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று (25.07.2025) சென்னை, அம்பத்தூர் சர்.ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் 6,007 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினர்.

சென்னை மாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வுகாண தமிழ்நாடு முதல்வரின் அறிவுரைக்கிணங்க,  மாநில அளவிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் இதுவரை 1,33,190 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்று (25.07.2025) அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் 2,445 பட்டாக்களும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திட்டங்கள் கீழ் 62 பட்டாக்களும், நகர நிலவரித் திட்டத்தின் கீழ் 3,500 பட்டாக்களும் என 6,007 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து