Idhayam Matrimony

கடந்த 6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      இந்தியா
RBI 2023-04-27

Source: provided

மும்பை : நாட்டில்  கடந்த 6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் நிதியாண்டில் 47.5 கோடியாக இருந்த வேலை வாய்ப்புகள், 2024 ஆம் நிதியாண்டில் 63.44 கோடியாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது, 2018 - 2024 இடைப்பட்ட நிதியாண்டுக் காலத்தில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த குறிப்பிட்ட அதிகரிப்பானது வேலையின்மை விகிதங்கள் குறைவு, தொழிலாளர் பங்களிப்பு உள்ளிட்ட வேலைவாய்ப்பு தொடர்பானவற்றில் நேர்மறையான முன்னேற்றங்களைக் காட்டுகிறது. இதே காலகட்டத்தில் 15 வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்களின் விகிதமும் 49.8 சதவிகிதத்திலிருந்து 60.1 சதவிகிதமாக உயர்ந்ததுடன், தொழிலாளர்களின் விகிதமும் 46.8 சதவிகிதத்திலிருந்து 58.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

2020-ல் 28.7 சதவிகிதமாக இருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது, 2024-ல் 40.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2018-ல் 6 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, 2024-ல் 3.2 சதவிகிதமாகக் குறைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து