எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெஹ்ரான் : ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர்.
ஈரானின் ஜஹேதானில் உள்ள நீதித்துறை கட்டடத்தின் மீது ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாதிகள் திடீரென சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே எட்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நீதிமன்றத்தைச் சுற்றி துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நீதித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய ஜாஹேதானில் உள்ள நீதித்துறை வளாகத்திற்குள் உள்ள நீதிபதிகளின் அறைக்குள் துப்பாக்கிதாரிகள் நுழைந்தனர். அவர்கள் சரமாரி தாக்குதல் நடத்தியதில் நீதிபதிகள் 13 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


