Idhayam Matrimony

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட ரூ. 4,900 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      தமிழகம்
mODI 2023-05-25

Source: provided

தூத்துக்குடி : 2 நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று தூத்துக்குடியில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (சனிக்கிழமை) தமிழகத்திற்கு வருகை தந்தார். மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை  திறந்து வைத்தார். 

இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் வழித்தட பணி, மதுரை-போடிநாயக்கனூர் ரெயில் பாதை மின்மயமாக்கல் திட்டம், கூடங்குளம் யூனிட் 3, 4-ல் மின்சாரம் எடுப்பதற்கான மின்பகிர்மான அமைப்பு தொடக்கம், ரூ.283 கோடி மதிப்பிலான ஆரல்வாய்மொழி-நாகர்கோவில், நெல்லை-மேலப்பாளைய்ம் இருவழிப்பாதை திட்டம், சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவின் நான்கு வழிச்சாலை திட்டம், வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.285 கோடியில் 3-வது வடக்கு சரக்கு தளவாட நிலையம் திறப்பு, நாகர்கோவில் நகரம்-சந்திப்பு-கன்னியாகுமரி இடையே இரட்டை ரெயில் பாதை திட்டம், ரூ.1,030 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் உள்பட தமிழகத்தில் நிறைவுற்ற ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து