முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டுப் பன்றிகள் சுட்டு பிடிக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      தமிழகம்
Raja-Kannappan

திருநெல்வேலி, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காட்டுப் பன்றிகள் சுட்டுப் பிடிக்கப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, அப்பர் கோதையார் பகுதிகளை உள்ளடக்கிய களக்காடு வனச்சரகப் பகுதியில்  விவசாயிகளுக்கு காட்டு பன்றிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை தடுப்பதற்கு, காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக வனத்துறை அலுவலகத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிக்கப்படும். குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டு யானை வருவதை தடுப்பதற்கு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வனப்பகுதியை 21.76 சதவீதமாக உயர்த்தியிருக்கிறோம். இன்னும் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் வனப்பகுதி 33 சதவீதமாக உயர்த்தப்படும்.

 தமிழ்நாட்டில் வனக் கல்லூரி கோவையில் உள்ளது. தென்பகுதியில் வனக் கல்லூரி அமைப்பதற்கு தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.  தென் தமிழக மக்களுக்காக திருச்சியில் பல்லுயிர் வன உயிரின பூங்கா 420 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.

இந்நிகழ்வில், களக்காடு சரணாலயம் துணை இயக்குநர் ராமேஸ்வரன், களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஸ், துணை தலைவர் பி.சி.ராஜன், களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகரன், திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் யோககேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து