Idhayam Matrimony

பார்லி., 5-வது நாளாக முடங்கியது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      இந்தியா
Parliment--

Source: provided

புதுடெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினரின் கடும் அமளியால் நேற்று 5-வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் முடங்கின.

சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு இதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.

இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 21-ந்தேதி தொடங்கிய பாராளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை. இந்த பாராளுமன்ற முடக்கம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. அந்தவகையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்று பகல் 11 மணிக்கு மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் பீகார் மாநில சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை கிளப்பினார்கள். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

கடும் கூச்சல் நிலவியதால் சபை 2 தடவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாள் முழுக்க மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. திங்கள் கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்கள் 'சர்' என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஏந்தி அவற்றை கிழித்து குப்பைத் தொட்டியில் வீசினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து