Idhayam Matrimony

5-வது நாளாக சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      தமிழகம்
CM-1 2025-07-23

Source: provided

சென்னை : ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு 5-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல வெளியாகியுள்ளது.

முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று சுவாசத்தை சீராக்க ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு எந்த குறைபாடும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் மேலும் சில தினங்கள் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு 5-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் தற்போது நல்லே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை அவரை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு சந்தித்து பேசினார்கள். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஏ.கே.விஜயன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து