எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், பார்லிமென்டை சமூகமாக நடத்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஜூலை 21ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. கடந்த 5 நாட்களாகவே, அவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளன. ஆபரேஷன் சிந்தூர், பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி பார்லிமென்டின் உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்ட நிலையிலும், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பார்லிமென்டை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார். அதன்பேரில் சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும், பார்லிமென்ட் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், பிரச்னைகளுக்கு அமளியின் மூலம் தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் விவாதத்தின் மூலமே தீர்வு காண முடியும் என்று கூறினார்.
இந்த நிலையில், சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று, பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டியுள்ளது. இதன்மூலம், திங்கட்கிழமை முதல் பார்லிமென்டில் அலுவல் பணிகள் சுமூகமாக நடக்கும் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


