முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா விரைவில் ஓய்வு பெறுவார் : இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      விளையாட்டு
Mohammad-Khaib 2023-11-08

Source: provided

மும்பை : இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கணித்துள்ளார்.

669 ரன்கள்... 

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய  இங்கிலாந்து அணி 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஜோ ரூட் 150 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் எடுத்தனர். பென் டக்கெட் (94 ரன்கள்), ஸாக் கிராலி (84 ரன்கள்), ஆலி போப் (71 ரன்கள்) எடுத்தனர்.

சிரமமின்றி...

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அவர்களை இந்திய பவுலர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.  இந்த போட்டியில் 'நம்பர் 1' பவுலர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் திணறடிக்கும் அளவுக்கு வேகம் இல்லை. இதனால் இங்கிலாந்து அணியினர் சிரமமின்றி ரன் சேகரித்தனர்.

விரைவில் ஓய்வு...

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கணித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "வரும் டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. சொல்லப்போனால் அவர் ஓய்வைக் கூட அறிவிக்கலாம். ஏனெனில் அவர் தன்னுடைய உடலால் தடுமாறுகிறார். அவருடைய உடல் ஒத்துழைக்க மறுக்கிறது அதனாலேயே இந்த போட்டியில் அவருடைய வேகம் குறைந்து விட்டது.

சுயநலமற்ற நபர்...

இருப்பினும் அவர் சுயநலமற்ற நபர். நாட்டுக்காக தம்மால் 100 சதவீத முயற்சிகளைக் கொடுக்க முடியவில்லை, போட்டிகளை வெல்ல முடியவில்லை, விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்று கருதினால் அவர் தொடர்ந்து விளையாட மறுப்பார். விராட், ரோகித், அஸ்வின் இங்கு (டெஸ்ட்) இல்லை. தற்போது பும்ரா இல்லாமலும் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து