முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் அணியுடன் விளையாட மறுத்தது ஏன்..? இந்தியா விளக்கம்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      விளையாட்டு
31-Ram-52

Source: provided

பர்மிங்காம்: லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் (டபிள்யூ.சி.எல்.) தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தது குறித்து இந்திய அணி காரணம்  தெரிவித்துள்ளது.

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்...

ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த டபிள்யூ.சி.எல். தொடரில் அந்தந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகிறார்கள். இந்தப் போட்டியில் அரையிறுதில் இந்தியா சாம்பியன்ஸ் அணியும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும் மோதுவதாக இருந்தது.

விளையாட மறுப்பு...

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி இந்திய அணியினர் பாகிஸ்தானுடன் விளையாடுவதை மறுத்துள்ளனர்.  ஏற்கெனவே, இந்தத் தொடரில் லீக் போட்டியில் ஒருமுறை இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா சாம்பியன்ஸ் அணி வெளியேறியதால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றுமொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியும் ஆஸி. அணியும் மோதுகின்றன. ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா விளக்கம்...

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்தியா சாம்பியன்ஸ் அணியினர் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் அவர்கள் கூறியதாவது: நாங்கள் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம். எங்களது நாடுதான் எப்போதும் எங்களுக்கு முதன்மையானது. பிறகுதான் மற்றவை. இந்திய அணியின் உறுப்பினர்கள் என்பதில் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. நாங்கள் கடினமாக உழைத்து இந்திய கொடியை எங்கள் சட்டைகளில் அணிந்துள்ளோம். எப்போதும், எங்கள் நாட்டை கீழிறக்க மாட்டோம். பாரத் மாதா கி ஜெய்.

இறுதிப் போட்டியிலும்... 

ஒருவேளை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடும்படி வந்திருந்தாலும் நாங்கள் மறுத்திருப்போம். இந்தியர்களாகிய நாங்கள் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருப்போம் எனக் கூறியுள்ளார்கள். இந்தியா சாம்பியன்ஸ் அணியினர் தங்களது எக்ஸ் பக்கத்திலும் எங்கள் கொள்கைகளில் இருந்து மாறமாட்டோம். நாடுதான் பிரதானம் எனக் கூறியுள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து