எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் 26-ந்தேதி தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 'அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற அமைப்பை உருவாக்கி, தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை, நேரில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தி அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'நம்மை மதிக்காத பா.ஜ.க. கூட்டணியில் இனியும் இருக்கக்கூடாது' என்று நிர்வாகிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று 2 முறை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:- கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அவரிடம் வலியுறுத்தினேன். அவர் என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நான் ஏற்பாடு செய்திருப்பேன். இப்போதும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் 26-ந்தேதி தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


