Idhayam Matrimony

வரும் செப்டம்பர் 9-ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

புதுடெல்லி : ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாட்டின் 17வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் செப்.,9ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்றைய தினம் மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கிய போது, ராஜ்ய சபாவை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நடத்தினார். அன்றைய தினம் இரவே திடீரென துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜக்தீப் தன்கர் அறிவித்தார். மேலும், தன் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

அதில், மருத்துவ காரணங்களுக்காக பதவி விலக முடிவு எடுத்ததாக ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022ல் துணை ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றிருந்தார். இந்த நிலையில், 17வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் செப்.,9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1) தேர்தல் அறிவிப்பு நாள்: ஆக., 07.

2) வேட்புமனு கடைசி நாள்: ஆக., 21.

3) வேட்புமனு பரிசீலனை: ஆக.,22.

4) வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்: ஆக., 25.

5) வாக்குப்பதிவு செப்டம்பர் 9-ம் தேதி.

6) வாக்கு எண்ணிக்கை - முடிவு - செப்டம்பர் 9-ம் தேதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து