Idhayam Matrimony

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இல்லாததால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சரிபார்க்கலாம். பெயர் விடுபட்டிருந்தால் வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க கோரிக்கை விடுக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.  வாக்காளரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோ செப்டம்பர் 1-ம் தேதி வரை இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து தீர்வைப் பெறலாம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் பீகாரில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.93 கோடியாக இருந்தது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. 

முன்னதாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர்  வெளியிட்ட அறிக்கையில், "பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்கள், மாநிலத்தின் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் பீகாரில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் காகித வடிவிலும், டிஜிட்டல் வடிவிலும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து