முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதாரை அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2025      இந்தியா
Aadhaar-card

Source: provided

புதுடெல்லி: ஆதாரை அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டது. கடந்த ஆகஸ்ட் 1 இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என ஆணையம் தெரிவித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாய சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வார தொடங்கில் இந்த வழக்கில் பிராமண பத்திரம் தாக்கல் செய்த் தேர்தல் ஆணையம், சட்டப்படி, நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மாலா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் வெளியிட நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இதுதொடர்பான அறிக்கையை 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினர். மக்கள் தெளிவு பெறவும், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாகவும் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேவை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பணிகள் வாக்காளர்களுக்கு வசதியாகவும், சிரமத்தை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து