எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜார்க்கண்ட் : ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும் தும்பகரா ஆகிய பகுதிகளில் நேற்று காலை 6 மணி அளவில் பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதிகளில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதுடன் இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை துவங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அவரிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சுதந்திர நாளை முன்னிட்டு, கொல்ஹான் பகுதியில் மிகப் பெரியளவிலான தாக்குதலை நடத்த மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஒன்றுக்கூடியுள்ளதாக, மேற்கு சிங்பம் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


