முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார்னருக்கு ஜோ ரூட் பதிலடி

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
14-Ram-58-1

Source: provided

ஆஷஸ் தொடருக்காக டேவிட் வார்னரின் விமர்சனத்துக்கு ஜோ ரூட் “இதெல்லம் புதியதா என்ன? இன்னும் 100 நாள்கள் இருக்கிறது” எனக் கூறியுள்ளார். இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதும் ஆஷஸ் தொடர் இந்தாண்டு நவ.21-இல் பெர்த் திடலில் மோதுகிறது. டெஸ்ட்டில் 13,000 ரன்களை கடந்த ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் ஒரு சதம்கூட அடித்ததில்லை என்ற புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் டேவிட் வார்னர், “ரூட்டுக்கு எதிராக ஹேசில்வுட் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதனால், ரூட் தனது முன்னங்காலில் இருக்கும் அலைச்சறுக்குப் பலகையை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில், இதற்குப் பதிலளித்த ஜோ ரூட் பேசியதாவது: சிலர் போட்டியை எப்படி பார்க்கிறார்கள், நேர்காணலில் எப்படி பேசுகிறார்கள் எனத் தெரியாது. எதுவும் புதியதில்லை. தலைப்புச் செய்திகளை உருவாக்கி இதை பெரிய தொடராக்க முயற்சிக்கிறார்கள். இது எதையுமே மாற்றாது. கடைசி சில தொடர்களில் பலவிதங்களில் கவனச்சிதறல்கள் ஏற்படுகின்றன. இந்தமுறை தொடரை மகிழ்ச்சியுடன் விளையாட இருக்கிறேன். ஆஸி. அழகான நாடு. கிரிக்கெட் விளையாட உகந்தது. 150 டெஸ்ட் போட்டிகளை விளையாடிவிட்டுச் செல்கிறேன். இன்னும் 100 நாள்கள் இருக்கையில் நான் மிகவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

தமிழக வீரருக்கு புதிய அந்தஸ்து

அல்மைட்டி மாஸ்டர்ஸ் கினாவ் கோப்பை செஸ் போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் 9-வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய வீரர் ரோகித் கிருஷ்ணா, அர்மேனியாவின் ஆர்தர் டேவிட்யானை வீழ்த்தியதன் மூலம் எலோ தரவரிசை புள்ளியில் 2500-ஐ கடந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டினார். சென்னையில் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் 20 வயதான ரோகித் கிருஷ்ணா இந்தியாவின் 89-வது கிராண்ட்மாஸ்டர் ஆவார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து