முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொட்ட சொட்ட நனையுது இசை வெளியீட்டு விழா

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      சினிமா
Sotta-Sotta-Nanayudu 2025-0

Source: provided

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ’சொட்ட சொட்ட நனையுது’. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது.  இளம் வயதில் தலையில் வழுக்கை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் மொத்த கதை. நவீன் எஸ்.ஃபரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கலக்கப்போவது யாரு புகழ் ராஜா படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.  நாயகனாக நிஷாந்த் ரூஷோ நடிக்க அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணி, மற்றும் ஷாலினி நடிக்கிறார்கள்.  விழாவில்,  ராஜா பேசுகையில், படத்தை 18 நாட்களில் எடுத்து முடித்துள்ளோம். இந்தப்படத்தில் நான்  நடித்திருக்கிறேன், வசனம் எழுதியுள்ளேன், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். இந்தப்படம் குடும்பத்தோடு ரசிக்கும் படியான படமாக இருக்கும் என்றார். Adler Entertainment  சார்பில் அசார் பேசுகையில், எங்கள் 10 வருட கனவு இப்போது தான் நனவாகியுள்ளது. இது மிகப்பெரிய பயணம். நிஷாந்தை எனக்கு 6 வருடங்களாகத் தெரியும். எங்களிடம் இருந்த மொத்த பணத்தையும் உழைப்பையும் போட்டு இப்படத்தை எடுத்துள்ளோம்  என்றார். இயக்குநர் நவீத் S ஃபரீத் பேசுகையில், 10 நாள் ஷீட்டிங் நடத்த தான்  எங்களிடம் பணம் இருந்தது, ஆனால் 18 நாளில் இந்தப்படத்தை முடித்து விட்டோம். அப்பாவை நடிக்க வைத்து அவரிடம் பணம் வாங்கி படத்தை எடுத்தோம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து