Idhayam Matrimony

தங்கம் விலை சற்று சரிவு

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, தங்கம் விலை சற்று குறைந்து நேற்று விற்பனையானது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 75 ஆயிரத்து 560 க்கு விற்பனையானது. 

தங்கம் விலை கடந்த மாதம் 23-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டது. அன்று ஒரு சவரன் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக ரூ.75 ஆயிரத்து 40க்கு விற்பனையானது. அதன் பின்னர் தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. இந்த சூழலில் தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கி உள்ளது.

ஒவ்வொரு நாளும் விலை மாற்றத்துடனேயே இருக்கிறது. இதில் பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த 1-ந்தேதி விலை குறைந்திருந்த நிலையில், அதற்கு மறு நாளில் இருந்து (2-ம் தேதியில் இருந்து) விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. கடந்த 6-ம் தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. ஏற்கனவே கடந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி ரூ.75 ஆயிரத்தை கடந்து இருந்தது. அதன் பின்னர் மீண்டும் அந்த விலையை தாண்டியது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களுக்கு முன் தங்கம் விலை அதிகரித்து இதுவரை இல்லாத உச்சத்தை அன்றைய நாளில் பதிவு செய்தது. அதாவது, ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 200-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினமும்விலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 470-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்து விற்பனையானது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 75 ஆயிரத்து 560 க்கு விற்பனையானது. கிராமிற்கு ரூ. 25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 445க்கு விற்பனையானது.  வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.127-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து