எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 மறுதேர்வு நடத்தக்கோரி சென்னையில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர், வனவர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பதவி்களுக்கு கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 3,935 இடங்களுக்கு நடந்த இந்த தேர்வை 11,48,019 பேர் எழுதி இருக்கின்றனர். தேர்வில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள், தேர்வுக்கான பாடத்திட்டத்தை தாண்டி கேட்கப்பட்டு இருந்ததாக தேர்வர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் குரூப்-4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும், மறுதேர்வு குறித்து ஆகஸ்டு 20-ந் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. முடிவெடுத்து அறிவிக்காவிட்டால், இம்மாத இறுதியில் மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


