முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலை போராட்ட தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-2-2025-08-15

சென்னை, விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை நேற்று ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். பின்னர் பல்வேறு விருதுகளை வழங்கினார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார். அதில் இடம்பெற்ற 9 முக்கிய அறிவிப்புகள்:

விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும். விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.12,000 என உயர்த்தப்படும். கட்டபொம்மன், வ.உ.சி ஆகியோரின் வழிந்தோன்றளுக்கு நிதி உதவி ரூ.11,000 என உயர்த்தி வழங்கப்படும். 2-ம் உலகப் போரில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.15,000 என உயர்த்தி வழங்கப்படும். 2-ம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் நிதி ரூ.8,000 என உயர்த்தி வழங்கப்படும். முன்னாள் படை வீரர்களின் வசதிக்காக சென்னை மாதவரத்தில் 33,000 சதுர அடி பரப்பில் ரூ.22 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய தங்கும் விடுதி அமைக்கப்படும். மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவு செய்யப்படும். ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள், மாவட்ட அளவில் ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும் போது திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இந்த 9 அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து