முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி முதல்வருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு நடவடிக்கை

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று முன்தினம் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு இசட் பிரிவு சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பை ஏற்ற சிஆர்பிஎஃப்: மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து, டெல்லியில் உள்ள ரேகா குப்தாவின் இல்லத்துக்கு நேற்று காலை சென்ற சி.ஆர்.பி.எப். வீரர்கள், டெல்லி போலீசாரிடம் இருந்து பாதுகாப்பை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். முதல்வருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் நிலவும் அரசியல் பரபரப்பைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசட் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?: இசட் பிரிவு பாதுகாப்பு என்பது மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றாக உள்ளது. அருகில் இருந்து பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள், இடத்துக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள், வாகனம் மற்றும் துணை வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் உட்பட சுமார் 20 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள். அதிக அச்சுறுத்தல் உள்ள நபர்களுக்கே இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம்.

முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: முதல்​வர் ரேகா குப்தா டெல்லியில் உள்ள தனது இல்​லத்​தில், பொது மக்கள் குறை​கேட்பு கூட்​டத்தை நேற்று முன்தினம் நடத்​திக்கொண்டிருந்த போது அங்கு வந்த குஜ​ராத்​தின் ராஜ்கோட் பகு​தியைச் சேர்ந்த ராஜேஷ் சக்​ரியா என்பவர், முதல்​வரிடம் புகார் மனு அளிப்பது போல் நெருங்கி திடீரென அவரை கன்​னத்​தில் அறைந்​தார். முதல்​வரை தள்​ளி​விட்​டபின், அவரது தலை முடியை பிடித்​தும் இழுத்​தார். அதற்​குள் முதல்​வரின் பாது​காவலர்கள் பாய்ந்து சென்று ராஜேஷ் சக்ரியாவை பிடித்து மடக்​கினர். அவர் உடனடி​யாக கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்​குதலில் காயம் அடைந்த டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவுக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்​தனர்.

நாய்​களை நேசிப்​பவ​ரா?: தாக்​குதல் நடத்​திய ராஜேஷ் சக்​ரி​யா​வின் தாய் பானு கூறுகை​யில், எனது மகன் ராஜேஷ் நாய்​களை நேசிப்​பவர். டெல்​லி​யில் தெரு​நாய்​களை பிடித்து காப்​பகங்​களில் அடைக்க உச்ச நீதி​மன்​றம் சமீபத்​தில் அளித்த உத்​தர​வால், ராஜேஷ் கோபம் அடைந்​தார். இதையடுத்​து​தான் அவர்​ டெல்​லி சென்​றார்​என்​றார்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து