முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயிலாடுதுறையில் ருசிகரம்: 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      தமிழகம்
TN 2025-09-02

Source: provided

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் அரசின் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிக்கும் 72 வயது முதியவரை கண்டு கல்லூரி பேராசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் இவரை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(வயது 72). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் இவர் தற்போது மனைவியுடன் வசித்து வருகிறார்.

ஐ.டி.ஐ. படித்த இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்தார். அப்போது எம்.காம்., எம்.பி.ஏ., படிப்பை படித்து முடித்துள்ளார். பணி ஓய்வு பெற்று 10 வருடங்கள் முடிவடைந்த நிலையில் படிப்பின் மீது ஆர்வம் குறையாத செல்வமணி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

சக மாணவர்களைப்போல் தோளில் புத்தகப் பையை சுமந்து கொண்டு கையில் மதிய உணவை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு உரிய நேரத்தில் வந்து செல்கிறார். உடல்நிலை சரியில்லாத தனது மனைவிக்கு தேவையான அனைத்தையும் செய்து வைத்து விட்டு காலை 9 மணிக்கு சரியாக கல்லூரிக்கு வரும் அவர் மாலை 5 மணி அளவில் கல்லூரி முடித்துவிட்டு மீண்டும் தனது ஊரான வடலூர் பகுதிக்கு செல்கின்றார். இவருடன் பழகும் மற்ற மாணவர்கள் இவரை தாத்தா என்று அன்புடன் அழைக்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து