முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய்யுடன் ரங்கசாமி கூட்டணி வைத்தால் புதுச்சேரிக்கு நல்லது செய்ய முடியாது: பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் பேட்டி

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      தமிழகம்
Vijay-Rangasamy-Ramalangam

புதுச்சேரி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் விவகாரம் மீண்டும் அரசியல் விவாதமாக்கப்பட்டிக்கிறது. அத்துடன், ஆளும் என்.ஆர்.காங்கிரஸுக்கும் கூட்டணியில் உடன் இருக்கும் பா.ஜ.க.-வுக்குமே சுமுகமான உறவு இல்லை என்று சொல்லப்படும் நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்

பா.ஜ.க.-வுக்கு புதுச்சேரியில் முன்பைவிட இப்போது ஆதரவு பெருகி இருப்பதாக உணர்கிறீர்களா?

புதுச்​சேரி மக்​கள் மத்​தி​யில் தற்​போது பா.ஜ.க.-வுக்கு நல்ல வரவேற்பு இருக்​கிறது. பிரதமர் நரேந்​திர மோடி​யின் செயல்​பாடு​களால் மாண​வர்​கள், படித்​தவர்​கள் மத்​தி​யில் பா.ஜ.க. மீதான பார்வை மாறி​யுள்​ளது.

தேர்தலுக்கு தயாராகிவிட்டீர்களா... கடந்த முறையைவிட இம்முறை அதிகமான இடங்களில் போட்டியிடும் திட்டம் ஏதும் இருக்கிறதா?

பா.ஜ.க., கூட்​டணி உணர்​வு​களை மதிக்​கும் கட்​சி. 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை என்​.ஆர்​.​காங்​கிரஸ், அதி​முக கட்​சிகளோடு சேர்ந்​து​தான் எதிர்​கொள்​ளப் போகி​றோம். இதில் எங்​களுக்கு எத்​தனை சீட் கேட்​பது என்​பது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்​யும். எங்​களின் தலைமை பெற்​றுத்​தரும் அத்​தனை இடங்​களி​லும் நூறு சதவீதம் வெற்​றி​பெறு​வதற்​கான முயற்​சிகளை நாங்​கள் எடுப்​போம். நிச்​ச​யம் கடந்த முறையை​விட இம்​முறை அதி​க​மான இடங்​களில் வெற்​றி​பெறு​வோம். இங்கு என்​.ஆர்​.​காங்​கிரஸ் தான் பெரிய கட்​சி. ஆகவே, தேர்​தலில் என்​.ஆர்​.​காங்​கிரஸை​விட, பா.ஜ.க. கூடு​தலான இடங்​களில் வென்​றாலும் முதல்​வர் ரங்​க​சாமி தலை​மை​யில் தான் ஆட்சி அமைப்​போம். அதே​போல் தமி​ழ​கத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்​பாடி பழனி​சாமி தலை​மை​யில் தான் ஆட்சி என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா தெரி​வித்​துள்​ளார்.

முதல்வர் ரங்கசாமி இம்முறை விஜய்யுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்களே?

முதல்​வர் ரங்​க​சாமி​யுடன், தவெக பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் மிகுந்த நட்பு கொண்​ட​வர். அதனால் விஜய்​யும் முதல்​வர் ரங்​க​சாமி​யுடன் நல்ல நட்​பில் இருக்​கி​றார். ரங்​க​சாமி மிகச்​சிறந்த ஆன்​மிக​வா​தி​யாக​வும் இருப்​ப​தால் அவரிடம் கருத்​துக் கேட்​பது, நாள் குறித்து மாநாடு நடத்​து​வது, ஆலோ​சிப்​பது, நலம் விசா​ரிப்​பது விஜய்க்கு வழக்​கம். இது நட்பு தான். ரங்​க​சாமி சாமானிய மனித​ராக இருந்​தா​லும், யாருடன் இருந்​தால் புதுச்​சேரி மக்​களுக்கு நல்​லது செய்ய முடி​யும், மத்​தி​யில் யார் ஆட்சி செய்​தால் நாடு நன்​றாக இருக்​கும் என்​பதை எல்​லாம் தெரிந்த அரசி​யல் தீர்க்​கதரிசி. ஆகவே நட்​புக்​கும், அரசி​யலுக்​கு​மான வித்​தி​யாசம் ரங்​க​சாமிக்கு தெரி​யும். விஜய் ஒரு நடிகர். இப்​போது தான் வளர்ந்து வரு​கி​றார். அவருடைய கட்​சிக்​காக அவர் பாடு​பட்​டுக்​கொண்​டிருக்​கி​றார். அவருடன் கூட்​டணி வைப்​ப​தால் புதுச்​சேரிக்கு நல்​லது எதை​யும் செய்ய முடி​யாது.

கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க. இருந்தும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறமுடியவில்லையே..?

புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து பெறு​வது எங்​களின் கொள்​கை. மாநில அந்​தஸ்து கேட்​பது ஏன் என்​பதை தலை​மை​யிடம் தெளிவுபடுத்​தி​யுள்​ளோம். முதல்​வர் ரங்​க​சாமி அனைத்​துக் கட்​சி​யினரை​யும் டெல்​லிக்கு அழைத்​துச் சென்று எங்​கள் தலை​மையை அணுகிக் கேட்​டால், அது மாநில அந்​தஸ்து பெறு​வதற்​கான முன்​னெடுப்​பாக இருக்​கும் என்​பதே எங்​களின் விருப்​பம்.

தன்னை இரண்டு அமைச்சர்கள் டார்ச்சர் செய்வதாக முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா குற்றம் சாட்டி இருக்கிறாரே?

டார்ச்​சர் செய்​தவர்​கள் எந்த அமைச்​சர்​கள் என்​பது நமக்​குத் தெரி​யாது. முதல்​வர் இருக்​கி​றார், அவர்​களு​டைய கட்​சி​யின் தலை​வ​ரும் அவர் தான். ஆகவே அவரிடம் நேரடி​யாகச் சென்று இதுபற்றி கூறி​னாலே உடனடி​யாக பிரச்​சினை முடிந்​து​விடும். இதனை பொது​வெளி​யில் பேசி இருப்​ப​தன் நோக்​கம் கட்​சி​யின் பெயரை கெடுப்​ப​தற்​காகவே என்று தெரி​கிறது.

முதல்வருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் சுமுகமான உறவு இல்லாமல் இருப்பது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்காதா?

முதல்​வர், துணைநிலை ஆளுநர் இடையே எந்​த​வித பிரச்​சினை​யும் இல்​லை. அவர்களுக்குள் உறவு சுமுக​மாகத்​தான் இருக்​கிறது.

புதுச்சேரியில் ஆளும் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக ஊழல் புகார்களை தெரிவித்து வருகின்றனவே?

புதுச்​சேரி​யில் வேலை வாய்ப்​பு, உள்​கட்​டமைப்பு வசதி​கள் சிறப்​பான முறை​யில் ஏற்​படுத்​தப்​படு​கிறது. இதனால் எதிர்​கட்​சிகள் குறை சொல்​வதற்கு எது​வும் இல்​லை. தேசிய தலை​மையை குறைசொல்ல முடி​யாது என்​ப​தால் பொத்​தாம் பொது​வாக புதுச்​சேரி​யில் ஆளும் அரசு மீது ஊழல் புகார் கூறி வரு​கின்​ற​னர். இங்கு சின்​ன​தாய் ஒரு தவறு நடந்​தா​லும் சிபிஐ விசா​ரணை வரைக்​கும் நடத்​தப்​படு​கிறது; தவறு செய்​தவர்​கள் தண்​டிக்​கப்​பட​வும் செய்​கி​றார்​கள்.

சமீபத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் கட்சியினர் மத்தியில் பேசிய நீங்கள், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பா.ஜ.க. ஆள்கிறது. ஆனால், கோரிமேடு எல்லையை தாண்டாத கட்சியும் இருக்கிறது” என்று என்.ஆர்.காங்கிரஸை மறைமுகமாக சாடினீர்களாமே?

கும்​மிடிப்​பூண்​டியை தாண்​டாத கட்​சிகள் என தமிழ்​நாட்டு கட்​சிகளை குறிப்​பிட்டே பேசினேன்; என்​.ஆர்​.​காங்​கிரஸை சொல்​ல​வில்​லை. அது அகில இந்​திய என்​.ஆர்​.​காங்​கிரஸ் கட்​சி. நாங்​கள் அந்த கட்​சியை முன்​னிறுத்​தியே அரசி​யல் செய்​கி​றோம். தமி​ழ​கத்​தில் மட்​டும் வெற்​றி​பெற்​று​விட்டு பிரமருக்​கும், அமித் ஷாவுக்​கும் பலர் சவால் விடு​கின்​ற​னர். எம்​ஜிஆர், ஜெயலி​தாவை வெல்​ல​முடி​யாத திமுக-​வினர், இப்​போது நூற்​றுக்​கும் கூடு​தலான இடங்​களை பிடித்து ஆட்சி அமைத்​துள்​ளனர். பா.ஜ.க. 19 மாநிலங்​களில் ஆட்​சிபுரி​கிறது; இந்​தி​யா​வையே ஆள்​கிறது. அப்​படிப்​பட்ட கட்​சிக்கு உதயநிதி ஸ்டா​லின் எல்​லாம் சவால் விடு​வது வேடிக்​கை​தான்.

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையா... இதில் உங்களின் நிலைப்பாடு என்ன?

 

மின்​துறை தனி​யார் மயமாகி​விட்​டது என்று கூறு​வது புரளி. பா.ஜ.க.-வை பொறுத்​தவரை மின்​துறையை தனி​யார் மயமாக்க வேண்​டாம் என்​பதே எங்​களின் விருப்​பம்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து