Idhayam Matrimony

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர்

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2025      உலகம்
Macron 2024-06-25

Source: provided

பாரிஸ் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார்.

ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மேக்ரான், “காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் ட்ரம்ப்புக்கு மட்டுமே உள்ளது. இந்த மோதலில் ஏதாவது செய்யக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமே. அவர் எங்களை விட இப்போரை நிறுத்த அதிகமாக செய்ய முடிவதற்கான காரணம் என்னவென்றால், காசாவில் போரை நடத்துவதற்கான ஆயுதங்களை நாங்கள் வழங்குவதில்லை, அமெரிக்காதான் வழங்குகிறது.

ஐநா பொதுசபையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில், ‘எனக்கு அமைதி வேண்டும். ஏழு மோதல்களை நிறுத்தினேன்’ என மீண்டும் பேசியுள்ளார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்றால், காசாவில் நடக்கும் போரை நிறுத்தினால் மட்டுமே அமைதிக்கான நோபல் பரிசு சாத்தியமாகும்” என்று மேக்ரான் கூறினார். 

கம்போடியா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் போர்நிறுத்தங்களை உருவாக்கியதற்காக ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் (செப்.23) பேசிய ட்ரம்ப், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளை நிராகரித்தார், அது ஹமாஸ் போராளிகளுக்கு ஒரு வெகுமதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். “காசாவில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கு உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து