எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : மதுரையில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 29 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிக்காக ரூ.100 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின், மாவட்ட விளையாட்டு அரங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெற்று வரும் பாரா விளையாட்டு வீரர்களுக்கான உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், ஹாக்கி மைதானம் ஆகிய திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மதுரையில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 29 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிக்காக ரூ.100 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த மைதானத்தை சென்னை ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் உள்ளது போல அமைப்பதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மைதானம், தென் தமிழகத்தில் உள்ள ஹாக்கி வீரர்களுக்கு பயிற்சி எடுக்க சிறந்த களமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


