எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவை மருத்துவமனையில் நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். மேலும் அவர் எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் எச்.வி.ஹண்டே. 1984-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் எம்.ஜி.ஆர். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து அறிக்கை வெளியிட்டவர்.
இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.வி. ஹண்டேவை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இந்தநிலையில் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்த தமது பார்வைகளை முன்வைத்தும் - தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு பொழிந்தும் முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே அவர்கள் எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை. 99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை, அவரது மருத்துவமனையில் சந்தித்து மகிழ்ந்தேன் என அதில் பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


