முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      தமிழகம்
TRP Raja

சென்னை, தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இ.பி.எப்.ஓ. வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளதுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முதல்வர் மு.க.ஸ்டாலினின் முன்னோடி கொள்கைகள் மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு சான்றாக மத்திய அரசின் இ.பி.எப்.ஓ. தரவுகள் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு சராசரியாக 12.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

2021–22 முதல் 2024–25 வரை, மாநிலம் 52 லட்சத்திற்கும் அதிகமான நிகர ஊதிய உறுப்பினர்கள் இ.பி.எப்.ஓ.ல் பதிவு செய்துள்ளனர். இது நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% ஆகும். இதற்கு முந்தைய ஆட்சியில் 2018-19 ஆம் ஆண்டில் வெறும் 5 லட்சம் இ.பி.எப்.ஓ. பதிவுகள் மட்டுமே நடந்தன. அப்போது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத்தை விட பின்தங்கியிருந்தது.

2022-23 ஆம் ஆண்டில் 14 லட்சத்திற்கும் அதிகமான இ.பி.எப்.ஓ. பதிவுகள் மட்டுமே நடந்தன. கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் தொடர்ந்து ஆண்டுக்கு 12.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பது உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தார். அவர் கூறியதை விட 20% அதிகமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து