முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே போக்குவரத்து நெரிசல்: பெங்களூருக்கு 3-வது இடம்

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      இந்தியா
Bangalore 2025-09-26

Source: provided

பெங்களூர் : போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே மூன்றாவது மோசமான நகரமாக பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் தொழில்நுட்பத் துறையின் இதயத் துடிப்பாக, நீண்ட காலமாக இருந்து வரும் பெங்களூரு, ஒரு காலத்தில் பல குடியிருப்பாளர்களின் கனவு இலக்காக இருந்தது. ஆனால், தற்போது போக்குவரத்து நெரிசல், நீர்த் தட்டுப்பாடு, சொத்துகள் உள்ளிட்ட காரணங்களால் பெங்களூரு வாழ்க்கை மோசமாகியுள்ளது.

பெங்களூரின் இந்த நிலைமையைக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பெங்களூரு மக்கள், ஒரு வருடத்தில் சராசரியாக 134 மணிநேர அளவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரில் போக்குவரத்து மட்டும் இல்லை; அதிகரிக்கும் காற்று மாசு, அதிக விலையிலான வீடுகள், நீர்ப் பற்றாக்குறை ஆகியவையும் மக்களின் வாழ்க்கையை கடிதாக்குகின்றன. இதன் காரணமாக சிறிய, உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கைத்தரத்தில் சிறந்து செயல்படும் நகரங்களுக்கு மக்கள் தேடுகின்றனர். இந்த வசதிகளெல்லாம், மைசூரில் இருக்கிறது. மைசூரில் நீங்கள் 15 நிமிடங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். வாழ்க்கைச் செலவும் பெங்களூரைவிட 10 முதல் 20 சதவிகிதம்வரையில் குறைவாக இருக்கும்.

மைசூரில், கடந்தாண்டில் மனைகளின் மதிப்பு 50 சதவிகிதம் உயர்ந்திருந்தாலும், அது பெங்களூரைவிட 30 முதல் 50 சதவிகிதம் குறைவே. குவெம்பு நகர், விஜயா நகர் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ. 60 லட்சத்துக்கும், சரஸ்வதிபுரம், ஜெயலட்சுமிபுரம் போன்ற உயர்தர குடியிருப்புப் பகுதிகளில் ஒரு கோடி ரூபாயிலேயே தொடங்குகின்றன. அதுமட்டுமின்றி, 2023-ல் பெங்களூரு - மைசூரு இடையிலான விரைவுச் சாலை நிறைவடைந்ததால், மைசூரை மேலும் வலுப்படுத்தியது.

கடந்த 10 ஆண்டுகளில் பெருநகரங்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி காணப்பட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் அதே வளர்ச்சி அடுக்கு 2 நகரங்களில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் பெருநகரங்கள், தொடர்ந்து உள்கட்டமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டு வரும்நிலையில், அடுக்கு 2 நகரங்களில் வளர்ச்சியடைகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து