முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பி.எஸ். உடன் சந்திப்பா..? செங்கோட்டையன் மறுப்பு: வதந்தி பரப்புவதாக குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2025      அரசியல்
Sengottaiyan 2023-04-20

ஈரோடு, சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேச வில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். திட்டமிட்டு சிலர் வதந்தி பரப்புவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவிடுத்தார். இதைத்தொடர்ந்து அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில், செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க.. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தினகரனின் அமமுக, மாவட்டச் செயலாளர்கள் சிலரிடமும் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். 

இந்த சூழலில், அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் இதை செங்கோட்டையன் மறுத்தார். வதந்தி பரப்பப்படுவதாக அவர் விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே, செங்கோட்டையன் பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியதாகவும், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் பேசிக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதையும் செங்கோட்டையன் மறுத்துள்ளார். 

இந்த நிலையில், ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;- சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. கடந்த 3 தினங்களுக்கு முன்பு நான் தெளிவான விளக்கம் கொடுத்து விட்டேன். எனக்கு அவப்பெயர் வரவேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு சிலர் வதந்தி பரப்புகின்றனர். இது எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. எனது நோக்கம், இயக்கம் வலுப்பெற வேண்டும், அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும். கோடிக்கணக்கான தொண்டர்களின் கனவு நிறைவேற வேண்டும். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகவே நான் பேசி வருகிறேன். அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து