எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
குவான்ஜு : தென் கொரியாவின் குவான்ஜு நகரில் நடந்து வரும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி (18 வயது) வரலாறு படைத்துள்ளார்.
ஷீத்தல் தேவி தங்கம்....
நேற்று (சனிக்கிழமை) நடந்த பெண்களுக்கான காம்பவுண்டு ஒற்றையர் பிரிவில் துருக்கியை சேர்ந்த உலகின் நம்பர் 1 சாம்பியன் ஓஸ்நுர் குரே கிர்டி -ஐ 146-143 என்ற கணக்கில் வீழ்த்தி ஷீத்தல் தேவி தங்கம் வென்றார். உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் கைகள் இன்றி தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை ஷீத்தல் தேவி படைத்துள்ளார்.
இறுதிக்கு தகுதி...
முன்னதாக நேற்று, பெண்களுக்கான காம்பவுண்டு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியா சார்பில் ஷீத்தல் தேவி, சரிதா ஜோடி, 'நம்பர்-1' இடம் பிடித்த பிரிட்டனின் போபே பைன், ஜெசிக்கா ஜோடியை 152-150 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. போகோமெலியா என்ற பிறவியிலேயே அரிய வகை நோயால் கைகள் இன்றி பிறந்த ஷீத்தல் தேவி, காலால் வில்லை உயர்த்தி, தோள்பட்டை மூலம் வில்லின் சரத்தை பின்னுக்கு இழுத்து, தாடையின் வலிமையைப் பயன்படுத்தி அவர் அம்பு எய்வதில் பயிற்சி பெற்றவர் ஆவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


