முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கான பிரச்னையை சரி செய்ய முயற்சி எடுப்போம் : அரவக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2025      தமிழகம்
EPS 2025-08-17

Source: provided

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சியில் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பிரச்னை இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் சட்டரீதியாக மீண்டும் மீட்டெடுக்க முயற்சி எடுப்போம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாட்டி பழனிசாமி அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் மலை வீதி ரவுண்டானா அருகே பெருவாரியாக திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

தினம் கரூர் மாவட்டமே மகிழ்ச்சிக் கடலில் திகழ்கிறது. அரசு அதிகாரிகள் சிந்தித்து நடுநிலையோடு செயல்பட வேண்டும். மகக்ளின் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. மக்களைக் காப்பதுதான் கடமை, அதைவிடுத்து மக்களுக்கும், எங்கள் தொண்டர்களுக்கும் நெருக்கடி கொடுத்தால் இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும். 

நான் முதல்வராக இருந்தபோது ஆயிரக்கணக்கான போராட்டம் நடந்தது, அதிக போராட்டங்களை சந்தித்தேன். உரிமைக்காகப் போராடுபவர்களைத் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால் திறமையில்லாத பொம்மை முதல்வராகத்தான் பார்க்கப்படும். மக்களுக்கும், பல கட்சிகளுக்கும் மதிப்பளிக்கக்கூடியவர்கள் நாங்கள். போராட்டங்கள் மூலம் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுவரும்போது, யாரும் தடுக்கக்கூடாது. 

அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்தேன் என்று படித்துப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்ததும் ஸ்டாலின் மிரண்டுவிட்டார். சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டார், அ.தி.மு.க. கட்சி, யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். அதுக்கு நீங்க ஏன் நடுங்கி கேள்வி எழுப்புகிறீர்கள்..? எப்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைந்ததோ அப்போதே ஸ்டாலினுக்கும் சகாக்களுக்கும் பயம் வந்துவிட்டது. 

அடுத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சி வரும். யார் யாரெல்லாம் உங்கள் மீது பொய் வழக்குப் போட்டார்களோ அவர்களைக் கண்டறிந்து விசாரிக்கப்பட்டு, தவறாக பொய் வழக்குப் போட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எதற்கும் அ.தி.மு.க.வினர் பயப்படத் தேவையில்லை, நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். கடைசி வரை இருப்போம். 

அம்மா இருந்தபோது 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணியாணை வழங்கினார். இன்று ஆசிரியர்கள் எல்லாம் மன வேதனையில் உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் பரிதவிக்கிறார்கள், (பள்ளிவாசல் தொழுகைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதால் பேச்சை சற்றுநேரம் நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினார்). அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தேர்வெழுதி தேர்ச்சி பெறுவதற்கான வழி குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கவேண்டும்.

இப்பகுதியில் நீண்ட காலமாக கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பிரச்னை இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் சட்டரீதியாக மீண்டும் மீட்டெடுக்க முயற்சி எடுப்போம் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து