Idhayam Matrimony

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2025      தமிழகம்
CM-1 2025-10-13

சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் துறையில் அவ்வபோது ஏற்படும் காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. 

அவ்வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை,  சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பெருந்திட்ட வரைவுப் பணிகளின் கீழ் 33.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவிலின் மலைமேல் மற்றும் அடிவாரத்தில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள்; வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம்,  மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவிலில் 4.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில் திருப்பணிகள்; நாமக்கல் மாவட்டம், குன்னமலை,  வல்லீஸ்வரர் திருக்கோவிலில் 3.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில் திருப்பணிகள்; 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பலூரில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி என மொத்தம் 43.20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்  சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 15.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், சலவைக் கூடம் மற்றும் புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு; ஈரோடு மாவட்டம், சென்னிமலை,  சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 8.27 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட மலைப்பாதை தார்சாலை மற்றும் புதிய பசுக்கள் காப்பகம், பக்தர்களுக்கான பேருந்து காத்திருப்பு கூடம்; திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை,  அருணாசலேசுவரர் திருக்கோவிலில் 10.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கோபுரங்கள் மற்றும் விமானங்களை வண்ண விளக்குகளால் ஒளிரூட்டுதல் மற்றும் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம், திண்டுக்கல் மாவட்டம், பழனி,  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 3.52 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இரண்டு கலைக் கல்லூரிகளில் மொழி ஆய்வுக் கூடங்கள் மற்றும்  இடும்பன் திருக்கோவில் முடிக் காணிக்கை மண்டபம்; 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர்  திறந்து வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம்,  அரங்கநாதசுவாமி திருக்கோவிலின் ஜவுளி ரெங்கசாமி கட்டளை தோப்பில் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பசுமடம்; ஈரோடு மாவட்டம், பண்ணாரி,  பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 1.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிரில் அமைப்புடன் கூடிய சுற்றுசுவர்; உத்திரமேரூர், மதுராந்தகம், வேடசந்தூர், ஆத்தூர், உசிலம்பட்டி, திருத்துறைப்பூண்டி, திருக்குவளை ஆகிய இடங்களில் 1.56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 13 ஆய்வர் அலுவலகங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம், திருநீர்மலை,  ரெங்கநாதப் பெருமாள் திருக்கோவிலில் 1.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு என மொத்தம் 48.81 கோடி ரூபாய் செலவிலான 27 முடிவுற்ற பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்வர்  திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் பொறியியல் பணியில் உதவி பொறியாளர் (மின்) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கும், பொறியாளர் சார்நிலை பணியில் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கும், அமைச்சுப் பணியில் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 42 நபர்களுக்கும், என மொத்தம் 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து