Idhayam Matrimony

மதுரவாயலில் 1,600 பேருக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2025      தமிழகம்
DCM-1 2025-10-13

சென்னை, சென்னை, மதுரவாயில் பகுதியில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (13.10.2025) சென்னை காரம்பாக்கம் நவரத்தன்மல் ஜெயின் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை:- இன்றைக்கு (நேற்று) இந்த மதுரவாயில் பகுதிக்கு வருகை தந்து 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகின்ற இந்த விழாவில் உங்களையெல்லாம் சந்தித்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன், பெருமையடைகின்றேன்.

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இது மூன்றும் தான் ஒவ்வொரு மனிதனுக்கு அடிப்படை தேவைகள். இதில் உடை, உணவு பெரும்பாலும் எல்லோருக்கும் கிடைத்திருக்கும் என்றே சொல்லலாம். ஆனால், குடியிருக்கின்ற இடம் பட்டாவுடன் வேண்டும் என்பது தான் இன்றைக்கு இருக்கும் மக்களுடைய மிகப்பெரிய பிரச்சனை, மிகப் பெரிய ஒரு சவாலாக இருந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக வீட்டுக்கு பட்டா இல்லை என்றால், அதனால் ஏற்படுகின்ற வேதனையை பட்டியலிட முடியாது. மின் இணைப்பு வாங்க முடியாது. தண்ணீர் இணைப்பு அவ்வளவு ஈசியாக கிடைத்து விடாது. வங்கி கடன் கிடைப்பது கஷ்டம். எப்போது யார் வந்து இடத்தை காலி செய்ய சொல்வார்கள் என்ற பதட்டம் கூடுதலாக இருக்கும். இன்றைக்கு உங்களுடைய கஷ்டங்களையெல்லாம், உங்களுடைய பதட்டங்களையெல்லாம் போக்கி பட்டா கொடுப்பதற்காக நாங்கள் அத்தனைபேரும் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கின்றோம்.

பட்டா கிடைப்பதினால், உங்களுடைய வீடுகளில் நிம்மதியாக, உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு நீங்கள் தூங்கப் போகலாம், பட்டா என்பது உங்களுடைய நெடுநாள் கோரிக்கை மட்டுமல்ல, அது உங்களுடைய உரிமை. இன்றைக்கு நம்முடைய முதல்வர், நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுடைய அந்த உரிமையை நிலைநாட்டி இருக்கின்றது.

சென்னை மட்டுமல்ல, பிற மாவட்டங்களிலும் புறம்போக்கு நிலத்தில் வசிக்கின்ற மக்களுக்கும் உடனடியாக பட்டா வழங்கவேண்டும் என்று நம்முடைய முதல்வர் உத்தரவிட்டிருக்கின்றார்.  இப்படி ஏழை, எளிய மக்களுடைய முன்னேற்றத்திற்காக கலைஞர் வழியில் நம்முடைய முதல்வர் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார். 

இன்றைக்கு பல முற்போக்கான திட்டங்களின் காரணமாக, இந்தியாவிலேயே நம்முடைய மாநிலம் 11.19 சதவீதம் வளர்ச்சியோடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் நம்முடைய தமிழ்நாடு சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து