முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2025      சினிமா
Mailanchi 2025-10-13

Source: provided

அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி. இப்படத்தில் 'கன்னி மாடம்' பட நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் ப. அர்ஜுன் தயாரித்திருக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள‌ இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா, சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், அகிலா பாலு மகேந்திரா, கங்கை அமரன், சீமான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ப. அர்ஜுன் பேசுகையில், 'மைலாஞ்சி' திரைப்படம் எனக்கு ஏராளமான அனுபவங்களை கற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திரைப்படம் எனக்கு நட்பை கற்றுக் கொடுத்திருக்கிறது. காதல் உணர்வை மென்மையாக சொல்லக்கூடிய இந்த கதைக்கு இளையராஜா தான் வேண்டும் என கேட்டேன். செழியனின் நட்பிற்காக இளையராஜா பணியாற்ற ஒப்புக்கொண்டார் என்றார். ஒளிப்பதிவாளர் செழியன் பேசுகையில், அஜயன் பாலா எனக்கு நண்பன். முதலில் படத்தை இயக்கினால் அதற்கு நீதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்' என்று சொல்லி அவருடைய பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, அட்வான்ஸ் என்று என்னிடம் கொடுத்தார். அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் என் அலுவலகத்திற்கு வந்து படத்தில் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டார். அப்போது நீ கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கிறது. வா படப்பிடிப்புக்கு செல்லலாம்' என்று படப்பிடிப்புக்கு புறப்பட்டோம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து