முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளப்பெருக்கு தொடர்வதால் குற்றாலத்தில் குளிக்க 3-வது நாளாக தடை

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      தமிழகம்
Kutralam--2023-07-06

தென்காசி, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் 2-வது நாளாகவும் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்டியது.

இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிக்கரைகளுக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பகலிலும் விடாது பெய்த மழையால் மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவு தெரியாதவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பழைய குற்றாலம் அருவியில் அனைத்து கிளைகளும் மறையும் அளவு தண்ணீர் கொட்டியது. மேலும் அங்கு நடைபாதைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்நிலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்மழையால் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து