முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1,000 ரன்களை கடந்த இந்தியர்: ஆஸ்திரேலிய மண்ணில் பல சாதனைகள் படைத்த ரோகித்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      விளையாட்டு
rohit

Source: provided

அடிலெய்டு: ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். மேலும், சேனா நாடுகளில் அதிக சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை ஆஸ்திரேலிய மண்ணில் அவர் படைத்துள்ளார். 

தொடக்கமே அதிர்ச்சி...

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நேற்று நடைபெற்றது.  அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 7 ஓவரில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை (சுப்மன் கில் 9, கோலி 0) இழந்து இந்தியா திணறியது.

ரோகித்- ஷ்ரேயாஸ்... 

இதனையடுத்து ரோகித்- ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அவ்வபோது பவுண்டரியும் சிக்சர்களையும் பறக்கவிட்ட இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 73 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதுவரை 21 இன்னிங்ஸ்களில் 56.36 சராசரியுடன் 1071 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 171* ஆகும்.

4-வது இடத்தை...

ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் 4 இடங்களில் விவ் ரிச்சர்ட்ஸ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், குமார் சங்கக்கரா மற்றும் ஜெயவர்தனே ஆகியோர் உள்ளனர். 5-வது வீரராக ரோகித் உள்ளார். மேலும் தொடக்க வீரராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட், கங்குலி சாதனையை முறியடித்து 4-வது இடத்தை ரோகித் பிடித்துள்ளார். அந்த பட்டியலில் சச்சின் 15310 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அதனை தொடர்ந்து ஜெய சூர்யா (12740), கிறிஸ் கெய்ல் (10179), ரோகித் சர்மா (9219), ஆடம் கில்கிறிஸ்ட் (9200), சவுரவ் கங்குலி (9146) ஆகியோர் உள்ளனர். 

அதிக சிக்சர்கள்...

இந்த சாதனையை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலி சாதனையை ரோகித் முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் 18,426 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் விராட் கோலி (14181) உள்ளார். 3-வது இடத்தில் ரோகித் சர்மா (11225) உள்ளார். அதற்கு அடுத்த இடங்களில் கங்குலி (11221), ராகுல் டிராவிட் (10768) உள்ளனர். இந்த போட்டியில் 2 சிக்சர்ஸ் விளாசியதன் மூலம் அதிலும் ரோகித் சாதனை படைத்துள்ளார். அதன்படி சேனா நாடுகளில் அதிக சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் ரோகித் சர்மா. அவர் 156 போட்டிகளில் 151 சிக்சர் விளாசி உள்ளார். அதற்கு அடுத்த இடங்களில் ஜெயசூர்யா (113), அப்ரிடி (105), தோனி, விராட் கோலி (83) சிக்சர்களுடன் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து